அமைச்சரவைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது: சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நேரு

0 299
Stalin trichy visit

தா பேட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது.

தா.பேட்டை பாவடி திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார்.மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், ஒன்றிய செயலாளர்கள்
ராமச்சந்திரன், திருஞானம், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தா.பேட்டை ஒன்றிய செயலாளர் கே. கே. ஆர் .சேகரன் அனைவரையும் வரவேற்றார்.
மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன்,கட்சிப் பேச்சாளர் குடந்தை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் தமிழ அரசின் சாதனைகள் குறித்து பேசினர். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என் .நேரு, சுற்று சூழல் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் நேரு பேசும்போது தமிழக அரசு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மையான அரசாக உள்ளது.
பேரறிவாளன் விடுதலையின்
மூலம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய தொழிற்சாலைகள், மக்களுக்கான திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்தும்
அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.
தா.பேட்டை ஒன்றியம் மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர
உரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீரேற்று பாசன திட்டத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிதிநிலை பற்றாக்குறை காரணமாக பணிகளை உடனடியாக செயல்படுத்த இயலவில்லை. விரைவில் செய்து தரப்படும்.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய தார் சாலைகள், மின் மயானங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள் என பல்வேறு கட்டமைப்பு வசதிகளை எனது துறையின் மூலம் செயல்படுத்த பட்டு வருகிறது.
மக்களுக்கான முதல்வராக மக்கள் விரும்பும் முதல்வராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளார். வரும் 24ஆம் தேதி சேலத்தில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
அந்தக் கூட்டத்தில் நீங்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.தொடர்ந்து தமிழக முதல்வர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.என்று பேசினார். நகர செயலாளர் முசிறி சிவகுமார்,ஒன்றிய குழு தலைவர் ஷர்மிளா பிரபாகரன்,துணைத் தலைவர் மல்லிகா பெரியசாமி, பேரூராட்சி தலைவர்கள் ராஜலட்சுமி, சௌந்தரராஜன், சங்கீதாசுரேஷ்,
சரண்யா பிரபு,மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி,
மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள்,
ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தா.பேட்டை நகர செயலாளர் தக்காளி தங்கராசு நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.