வேளாண் வளர்ச்சித் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தலைமைச் செயலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள வட்டாரங்களில் காணொளி வாயிலாக இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தாழம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் காணும் வகையில் காணொளி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் மனித நேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, வேளாண் துறை இணை இயக்குநர் சாந்தி, உதவி இயக்குநர் கோமதி, தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் வேலாயுதம் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
முதல்வரின் நிகழ்ச்சியை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, 200 விவசாயிகளுக்கு தலா 3கன்றுகள் வீதம் 600 தென்னைமரக் கன்றுகள், உளுந்து பயிர் விதைகள், மண்புழு உரம், வீட்டுத்தோட்ட காய்கறிவிதைகள், மருந்து தெளிப்பான்கள் வழங்கியதோடு, பண்ணைக்குட்டைகள் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் பணி ஆணைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தென்னனை மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, முன்னாள் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் ராஜா காவேரிமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் கீதா, ஊராட்சி மன்ற தலைவர் மகாலெட்சுமி சண்முகவேலாயுதம், துணைத்தலைவர் திருமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.