திருச்சியில் நயன்தாரா

0 2,130
Stalin trichy visit

இன்று காலை சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிரபல நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொள்ளப் போகும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான விக்னேஷ் சிவனின் சொந்த ஊரான லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் அவர் நேரடியாக கும்பகோணம் திருவையாறு பகுதியில் உள்ள கிராமத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில பிரசித்தி பெற்ற கோவில்களில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று இரவு மீண்டும் 7 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட உள்ளதாக அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.