அடைக்கப்பட்ட பாதையை திறந்துவிடக்கோரி – ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் எம்.பியிடம் மனு

0 264
Stalin trichy visit

திருச்சி செந்தண்ணீர்புரம் வழியாக பொன்மலை பணிமனை மற்றும் பள்ளிகள், மருத்துவமனை, காவல் நிலையம்,சந்தை உள்ளிட்ட தேவைகளுக்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சென்று வருவதற்கு ஏற்கனவே இருந்து வந்த பாதை தற்பொழுது அடைக்கப்பட்டுள்ளது ரயில்வே நிர்வாகம் மீண்டும் அந்த பாதையை திறந்து விடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமாகிய தோழர் சு.வெங்கடேசன் அவர்களிடம் திருச்சி மாநகராட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் S.சுரேஷ் அவர்கள் மனு அளித்தார் அந்த மனுவில் மீண்டும் பொன்மலை பகுதிகளுக்கு மக்கள் சென்று வருவதற்கு பாதை திறந்திட ஆவன செய்திட வேண்டும் என கேட்டுள்ளார்.இதர நிகழ்வில் DYFI மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின்,பாலக்கரை பகுதி செயலாளர் சிவக்குமார், மற்றும் சீனிவாசன், பிரபு, விஸ்வநாதன் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.