திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டம்..
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர், மாவட்ட பொறுப்பாளருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு !
கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டதை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில்,(30.05.2022 திங்கள்) காலை 10.00 மணிக்கு நடைபெறுகின்றது. இக்கூட்டத்தில் மாநில,மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,பகுதி, நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்திட கேட்டுக்கொள்கின்றேன் .
பொருள் :- ஜூன் – 3ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா,
கழக ஆக்கப்பணிகள்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
மாவட்ட கழக பொறுப்பாளர்,
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்,
திருச்சி தெற்கு மாவட்ட கழகம்.