இலவச கண் பரிசோதனை முகாம்…
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம், குணசீலம் ஊராட்சியில் மாகத்மா கண் மருத்துவமனை மற்றும் மக்கள் நல பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று குணசீலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் M.குருநாதன் , B.Sc., Agri ., தொடங்கி வைத்தார். குணசீலம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
