14வது நாளாக தொடரும் முகாம் தமிழர்களின் பட்டினி போராட்டம் : முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி மத்திய சிறையிலுள்ள முகாமில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி 14 நாட்களாக தொடர்ந்து பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முகாமிலுள்ள தமிழர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில் 02.06.2022 இன்றோடு பதின்னாங்காம் நாளை கடந்த நிலையில் உள்ளோம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது தமிழக உறவுகளே எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் ஓர் உயிர் போனால் திரும்ப பெற முடியாது. தயவு செய்து முதல்வர் அவர்கள் இதற்கு தகுந்த முடிவினை தவீர்கள் என்ற நம்பிக்கையில் எம் உயிரினை கையில் பிடித்து இருக்கிறோம்
இன்று உண்ணாவிரதம் இருக்கும் 8 பேரின் நிலை 12 நாட்கள் கடந்து போனதால் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.. இன்று காலையில் இருந்து அவர்களை வைத்து ஏறி வந்து பார்ப்பதற்கும் சிகிச்சைக்குரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நாங்கள் எங்கள் சிறப்பு முகாம் அதிகாரிகளிடம் கேட்டபோது.. தற்போது இரவு 8 மணி ஆகிறது . இந்த நிமிடம் வரைக்கும் வைத்தீர்கள் வரவுமில்லை எந்தவித சிகிச்சைக்குரிய முன்னேற்பாடுகளும் செய்யவும் இல்லை. இது எங்களுக்கு மிகவும் வேதனையையும் எங்கள் உறவுகளை இழந்து போகும் நிலையில் கிடப்பதை பார்த்து முடியாமல் நாங்கள் தற்பொழுது பிரதான வாசலில் வந்து இந்த கொட்டும் மழையில் எங்கள் உறவுகளுக்காக நாங்கள் இங்கு அவர்களை வந்து வைத்தியர்கள் சந்தித்து சிகிச்சை கொடுக்கும் வரைக்கும் உட்காருவோம் என்ற உறுதிப்பாட்டில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.