மின்சாரம் தாக்கி வாலிபர் பலி போலீசார் வழக்கு பதிவு

0 332
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் குளித்துவிட்டு துணிகளை துணி காய போட்ட போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

உத்தமர்சீலி சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் 28 வயதான விக்னேஷ் .இவருடைய மனைவி 23 வயதான முத்துலட்சுமி். இவர்களுக்கு மூன்று மாதத்தில் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 31ம் தேதி இரவு சுப்பிரமணி வீட்டில் குளித்துவிட்டு தனது துணியை வீட்டிலிருந்த கம்பியில் போட வந்துள்ளார் அதிலிருந்து மின்சாரம் கசிந்து கொண்டிருந்தது.மேலும் அன்றிரவு மழை பெய்து கொண்டிருந்தது. இதை அறியாத விக்னேஷ் துணியை காயபோடும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.