காமராஜர் காலனி பொதுமக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றிக் கொடுத்த மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கதிரவன்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் காலனி 11வது வார்டில் பழைய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை தூர் வாரி சின்டெக்ஸ் டேங்க் அமைத்து காங்கீரிட் தளம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கதிரவனிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று சம்பவ இடத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ கதிரவன் உடனே பணிகளை துரிதப்படுத்தி கிணற்றை தூர் வாரி சின்டெக்ஸ் டேங்க் அமைத்து கிணற்றை சுற்றி காங்கீரிட் தளம் அமைத்துக் கொடுத்தார். தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிக் கொடுத்த. மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ.கதிரவனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்ரீதர் மணச்சநல்லூர் திமுக நகர செயலாளர் சிவகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.