மழைக்காக ஒதுங்கியவரிடம் நகை, செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

0 343
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை சாத்தம்பாடி பேருந்து நிறுத்தத்தில் மழைக்காக ஒதுங்கியவரிடம் நகை,செல்போனை வழிப்பறி செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கைக்குடி பகுதியை சேர்ந்தவர் 41 வயதான டேவிட் சேவியர் இவரது உறவினரின் இல்ல திருமண விழாவிற்காக திருச்சியில் நேற்று ஜவுளி நகைகளை வாங்கிக் கொண்டு சமயபுரம் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவரது சகோதரி மகளை லால்குடி அருகே அலங்காநல்லூர் இருக்கும் வீட்டில் விடுவதற்காக பைக்கில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாந்தம்பாடி பேருந்து நிறுத்தத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த லால்குடி  மேல பெருங்காவூரைச் சேர்ந்த ஜெகராஜ் மகன் 22 வயதாகும் பவுல்ராஜ் மற்றும் திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் 28 வயதான மணிகண்டன் ஆகிய இருவரும் அவர்களை மிரட்டி 2 பவுன் தங்க செயின் ஒரு செல்போனை பறித்தனர்.

அப்போது உறவினரின் மகள் உதவிக்காக கத்தி கூச்சலிட்டார்.பின்னர் அங்கிருந்த ஒரு இளைஞரை மடக்கிப் பிடித்தனர். மற்றொரு இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பறித்த தங்கச்சங்கிலி செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து பறித்த 2 பவுன் செயின்,செல்போன் வழிப்றிக்கு பயன்படுத்திய பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.