திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேசனமங்கலம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு அய்யனார் சாமி, செல்லாண்டி, அம்மன்,காமாட்சி அம்மன், பெரியண்ண சாமி,பொந்தடி புது கருப்பண்ணசாமி திருக்கோவில்
அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.இத்திருக்கோவிலில் அப்பகுதி மக்களுக்கு குல தெய்வமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் மூன்று கோவில்களிலும் பொதுமக்கள்,பக்தர்கள்பண உதவி பொருள்
உதவியுடன் பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டுஇன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவானது கடந்த 3ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 10.30 மணியளவில் நடைபெற்றது.முன்னதாக புனித நீர் கலசங்கள் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஒலிக்க, வான வேடிக்கைகள் முழங்க மேளதாளத்துடன் எடுத்து வரப்பட்டு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அப்போது அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி அம்பாளின் திருநாமத்தை உரக்க உச்சரித்தனர்.இந்த மகா கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.