சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை மாநாடு உழவர் சந்தை திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்-மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, .எம்.சின்னதுரை, இரா.கலா, திரு.ஆ.செல்வம், மு.அன்பரசு ஆகியோரும் சத்துணவு ஊழியர்களும் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கை மனுவினை அமைச்சர் அவர்களிடம் அளித்தார்கள்.