மக்களுக்கான இயக்கம் திமுக : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

0 308
Stalin trichy visit

திமுக இன்னும் ஐந்து வருடம் மட்டும் அல்ல 50 வருடம் ஆட்சியில் இருக்கும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ விமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நடந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கூறினார்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 99வது பிறந்த நாளை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் தொகுதி வாரியாக பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதி திமுக சார்பில் நடந்த கலைஞரின் 99வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளரும் 42 வது வார்டு கவுன்சிலருமான நீலமேகம் தலைமை வகித்தார்.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் கூட்டத்தை தான் மட்டுமல்லாது முதல்வரும் உற்று நோக்குகிறார். கலைஞர் எந்த ஒரு திட்டத்தை தொடங்குவது என்றாலும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில்தான் தொடங்குவார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காட்டூர் பாப்பா குறிச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சத்துணவு திட்டத்தை தொடங்கினார். தற்பொழுது திருவெறும்பூர் தொகுதிக்கு பள்ளிகல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கும் மக்களுக்கும் எப்பொழுதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது போராடி செய்தோம் தற்பொழுது ஆளுங்கட்சியாக இருப்பதால் மக்களின் தேவையான அனைத்தையும் செய்வோம்.

தமிழ்நாடு முழுவதும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓரளவு தெரிவதுபோல் திருவெறும்பூர் தொகுதியையும் சேர்த்து தெரியும்

திருச்சி மாவட்டத்தில் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரி, கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவமனை, திருவெறும்பூர் உழவர் சந்தை, தாலுகா அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, தகவல் தொழில்நுட்ப பூங்கா, பாதாள சாக்கடை திட்டம், இப்படி பல கிட்டங்கள் திருச்சி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட சிப் திருவெறும்பூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இத்தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து இன்னும் செய்வோம் செய்து காட்டுவோம் என்ற உத்வேகம் என்னிடத்தில் உள்ளது.

சிலர் நம்மை விமர்சனம் செய்வதை காதில் வாங்கி கொள்ள வேண்டாம் வாக்களித்த நீங்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள்,

ஒருவர் இரண்டாவது முறையாக வாக்களித்து ஒரு உதவாக்கரையை தேர்ந்தெடுத்து உள்ளதால் அவதிப்படப்போகிறீர்கள் என பேசியது அரசியல் கடந்து பேசக்கூடாது என கேட்டுக் கொள்வதாகவும்,

மக்கள்தான் வாக்களித்த எஜமானர்கள் வாக்களித்தாலும் வாக்கு அளிக்காவிட்டாலும் தொண்டனாகவும் தோழனாகவும் திமுகவினர் இருப்போம் என்றும் கூறினார்.

மேலும் திமுக கட்சி கிடையாது மக்களுக்கான இயக்கம் அதனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஆட்சியில் இருந்தபோதும் இல்லாவிட்டாலும் செய்வோம் என்றும் தேர்தலின்போது 505 வாக்குறுதிகள் கொடுத்ததாகவும் அதில் 250 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்று உள்ளதாகவும். திமுக இன்னும் 5 வருடம் ஆட்சியில் இருக்கும் என கூறுவதை விட்டு விடுங்கள் இன்னும் 50 வருடம் திமுக தான் ஆட்சியில் இருக்கும் மக்களின் தேவையை உணர்ந்து செய்யும் இடத்தில் நாம் இருப்போம்.

திராவிட இயக்கம் சிந்தனையை ஒருவர் படமாக எடுக்கும்போது ஐந்து பாகமாக எடுக்க வேண்டும் முதல் பாகம் பெரியார், இரண்டாவது அறிஞர் அண்ணா, மூன்றாவது கலைஞர், நாலாவது பாகம் தமிழக முதல்வர் தற்பொழுது எழுதி வருகிறார்.
ஐந்தாவது பாகம் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் என்றும் கூறினார்.

எனவே நாம் இனம் மொழி மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறினார்.

தலைமையிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையில் பேசியதாவது.,

“”டில்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்குச் சில ஆட்டுக்குட்டிகள் மிரட்டி கத்துகின்றன. வரலாற்று சிறப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சரைத் தரக்குறைவாக விமர்சிப்பதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். பயந்து அஞ்சி நடுங்கும் கட்சியல்ல திமுக. ஜனநாயக உச்சியின் சிகரமாய்த் திகழ்கிறார் முதல்வர் ஸ்டாலின். திருவாரூரில் ஓடாத ஆழித்தேரை ஓடவைத்தவர் கருணாநிதி. இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய அவரது பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்பா ? இதற்கெல்லாம் அஞ்சிபதுங்கும் கழகமல்ல திமுக. எந்தவொரு மிரட்டலையும் சவாலையும் திமுக சந்திக்கும். எதற்கும் எப்போதும் சமரசமாகாத கருணாநிதி வழியிலேயே ஸ்டாலினும் நடைபோடுகிறார்.

இனியும் நடைபோடுவார். ஆனால், அவர் சமரசமாகிடுவார் என அவதூறு பரப்பி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியில் தமிழகம் இன்று பூந்தோட்டமாய்த் திகழ்கிறது.

கல்லறை சென்ற தலைவர்களை இன்றைக்கு சனாதன கும்பல் கொச்சைப்படுத்தி வருவது என்ன நாகரிகம் என தெரியவில்லை. நபிகளை அவமதித்ததால் அந்நிய நாடுகளில் கண்டன போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

நம்மை மிரட்டிப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமல் ஆட்சி செய்யும் ஸ்டாலினுக்கு உறுதுணையாய் திமுகவினரின் உழைப்பும், தீவிர கண்காணிப்பும் இனிதான் தேவை. பல்வேறு பிரச்சனைகள் சூழ்ந்த பள்ளிக்கல்வித்துறையைச் சிரமம் பாராது சிரித்தமுகத்துடனேயே செயல்படுத்துவது ஆச்சரியமே. ஆனால் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

கட்சியைத் தூக்க முடியாதவர்கள் பல்லக்கு தூக்க வந்தார்கள். இனி சும்மா இருக்க மாட்டோம். இனி திமுக சார்பில் பாசறை கூட்டங்கள் நடக்கும். கடந்த 77 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் தண்ணீர் திறந்தது ஸ்டாலினின் சிறந்த ஆட்சியில்தான். 8 வழி எடப்பாடி பழனிச்சாமி பேண்டு போடனுங்கிறதுக்கே வெளிநாடு சென்றார். என்னுடன் ஒரே மேடையில் பேச தயாரா? ! ஸ்டாலின் ஆட்சியைக் குறைகூற முடியாமல் பிரச்சனைகளைத் தேடி அலைகிறார்கள் பத்திரிகையாளர்களை அவதூறாய்ப் பேசுவது உட்பட . நாங்கள் குற்றமற்றவர்கள். டிப்ளமேட்டிவ் பாலிட்டிஸனாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒண்ணேகால் வருடங்கள் போராடிய விவசாயிகளுக்கு எதிராக சட்டம் நிறைவேற்ற அதிமுக துணைபோனது.
இந்திய அரசியலிலிருந்து இவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள்”” – என்று பேசினார்.

முன்னாள் எம்எல்ஏ., சேகரன், மாவட்ட ஊராட்சிகள்குழு துணைச்சேர்மன் கருணாநிதி, இலக்கியஅணி வண்ணை அரங்கநாதன் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் மாநகராட்சி துணைமேய
ர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன், கவுன்சிலர் சிவக்குமார், நிர்வாகிகள் செல்லைய்யா, அன்பழகன், சாந்தகுமாரி, சியாமளாதேவி, ரோஸ்லின், வில்சன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, வட்ட செயலாளர் தமிழ்மணி வரவேற்றார்.பகுதி துணைச்செயலாளர் சுருளிதுரை நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.