ஸ்ரீ நாவலடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா… அமைச்சர்கள் பங்கேற்பு… …

0 329
Stalin trichy visit

திருச்சி மதுரை ரோடு கண்ணன் ஸ்டோர், குப்பாங்குளத்தில் அமைந்துள்ள தெய்வ மனம் கமழும் சோழ வளநாட்டில் கங்கையின் புனித காவிரி நதி பாயும் வளமிகு செழுமையான நிலங்களால் சூழப் பெற்றதும் சமயக் குரவர்களால் பாடல் பெற்ற அநேக திவ்விய திருத்தலங்களை தன்னத்தே கொண்டதுமான திரிசிராபுரம் என்னும் மலைக்கோட்டையின் கண் எழுந்தருளியுள்ள பால் நினைந்தூட்டும் தாயிலும் சாலப்பிரிந்து என்னும் பொருளுரையின் படி தாயுமானவர் ஆலயத்திற்கு தெற்கு திசையில் அமைந்துள்ள ஸ்ரீ நாவலடி செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள நாவலடி ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன், ஸ்ரீ பால விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பண சுவாமி, ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நிகழ்வு நடைபெற்றது. இக்குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருந்தினராக கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

       

Leave A Reply

Your email address will not be published.