பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கைது செய்யக் கோரி திருச்சியில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

0 431
Stalin trichy visit

ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் முஸ்லிம்களின் உயிரிலும் மேலான அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு பரப்புரை செய்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவையும் இதைபோன்று தன்னுடைய டிவிட்டர் பதிவில் நபிகளாரை குறித்து அவதூறு பரப்புரை செய்த பாஜக டெல்லி ஊடக பிரிவைச் சேர்ந்த நவீன் ஜின்டாலையும் மக்களைப் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் பரப்புரை செய்ததற்காகப் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாகக் கைது செய்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 10.06.2022 (மாலை 4.00 மணிக்கு) திருச்சியில் பாலக்கரை ரவுண்டானா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் A. இப்ராஹிம், மமக மாவட்ட செயலாளர் A. பைஸ் அகமது MC, மற்றும் மாவட்ட பொருளாளர் A. அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மமக பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமது MLA மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் துரை.தமிழரசு B.A.,LLB. ஆகியோர் இப்போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் தமுமுக, மமக மாவட்ட துணை, அணி நிர்வாகிகள், பகுதி, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள், பெண்கள், தோழமை கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆகியோர் கலந்துகண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.