காட்டூர், திருவெறும்பூர் பகுதிகளில் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் இருக்காது : மாநகராட்சி ஆணையர்

0 217
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட புதிய வார்டு எண்.38,39,43,40,41 மற்றும் 42 க்குட்பட்ட காட்டூர், திருவெறும்பூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கொள்ளிடம் ஆற்றில் உள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் உள்ள ஆரக்குழாய்கள் (Radial Arms) பழுதடைந்துள்ளதால் பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தரைமட்ட தொட்டிகள் மராமத்து பணி நடைபெற உள்ளது. எனவே திருவெறும்பூர் ஒன்றிய காலனி, வள்ளுவர் நகர், கைலாஷ் நகர், விக்னேஷ் நகர், வைத்தியலிங்கம் நகர், கணேஷ் நகர், மஞ்சதிடல், சக்தி நகர், ஸ்ரீ பாலாஜி நகர், கொக்கரசம்பேட்டை, எல்லக்குடி, ஆலத்தூர், கே.கே.கோட்டை அக்ரஹாரம், காவேரி நகர், காந்தி நகர்,

பாத்திமாபுரம், முருகன் கோவில் தெரு, அழகு மாரியம்மன் கோவில் தெரு, பர்மா காலனி, வேணுகோபால் –. நகர், பாரதிதாசன் நகர், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு 18.06.2022 முதல் 20:06:2022 ம் தேதி வரை குடிநீர்

விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.

ஆணையர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி /

 

Leave A Reply

Your email address will not be published.