மண்ணச்சநல்லூர் கால்நடை மருந்தகத்தில் பெண்கள் தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தில் பயிற்சி

0 297
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள கால்நடை மருந்தகத்தில் பெண்கள் தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தில் பயிற்சி முகாம் திருச்சி மண்டல இணை இயக்குனர் மருத்துவர் எஸ்தர் ஷீலா தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2021 -22 ஆம் ஆண்டின் ஊரக பெண்கள் தொழில் முனைவோராக்குதல் 100 சதவீத மானிய திட்டத்தில் 153 பயனாளிகளுக்கு சுமார் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் ஒவ்வொருவருக்கும் 5 ஆடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்து அவர்களுக்கான பயிற்சி முகாம் மண்ணச்சநல்லூர் கால்நடை மருந்தகத்தில் நடைப்பெற்றது. இதில் வெள்ளாடுகளை வளர்ப்பது அதைப் பராமரிப்பது கொட்டகை அமைப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சியை கால்நடை மருத்துவர்கள் மருத்துவர் லட்சுமி பிரசாத், மருத்துவர் பழனி, அலெக்ஸ் ஆகியோர் பயனாளிகளுக்கு பயிற்சியை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.