திருச்சியில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ABVP அமைப்பினர் சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம்!

0 451
Stalin trichy visit

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு திருச்சி மாவட்டம் சார்பாக பாரத தேசத்தின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பொறுப்பாளர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள் பொதுமக்களுடன் இணைந்து முன்களப்பணியாளர்கள், முன்னாள் இராணுவ வீரர்கள், பெரியோர்கள் மூலம் தேசத்தின் பெருமைக்குரிய மூவர்ண கொடியினை கிராமங்கள் தோறும் ஏற்றினர்.

இந்நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு சுதந்திரம் – 75 நிகழ்ச்சியினை ஒரு கிராமம் ஒரு பதாகை என்னும் பெயரில் மாவட்டம் முழுவதும் பாரத தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

 

Leave A Reply

Your email address will not be published.