காங்கிரஸ் கட்சியினர் சார்பாக துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
துவரங்குறிச்சியில் பேருந்து நிலையம் அருகில் இன்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் , செ.ஜோதிமணி அறிவுறுத்தலின்படி, மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரங்குறிச்சியில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.

இவ்விழாவில் வட்டாரத் தலைவர் தலைமையில் ரங்கன், மாவட்ட பொது செயலாளர் அல்லிமுத்து, மாவட்ட செயலாளர் தமிழரசன், பொன்னுச்சாமி, விவசாய அணி பொறுப்பாளர் பொன்னுசாமி, சிறுபான்மைப் பிரிவினர் பீட்டர், மகிளா காங்கிரஸ் சரோஜா, இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ராசாத்தி, ஒன்றிய ஓபிஎஸ்சி அணித்தலைவர்பி .கணேசன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்கள்.