ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக ஜாதியை ஆயுதமாக பயன்படுத்துகிறார் : முன்னாள் எம்பி ப.குமார் பகிரங்க குற்றச்சாட்டு.

0 456
Stalin trichy visit

ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக ஜாதியை ஆயுதமாக பயன்படுத்துகிறார் –
ஒ.பி.எஸ் சுற்று பயணத்தால் அதிமுகவில் எந்த மாற்றமும் வராது – திருச்சி அதிமுக முன்னாள் எம்பி ப.குமார் பகிரங்க குற்றச்சாட்டு.

திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் :

ஒபிஎஸ் தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் அவர் செய்ததில்லை – தற்போது அதிமுகவில் 19 முக்குலத்தோர் சமுதாய மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்,அவர்களில் 2 பேர் தவிர மற்ற 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி ஜாதி,மதம் பாராமல் பணியாற்றுவார் என நம்புகிறோம்.

சசிகலா,டிடிவி தொண்டர்களின் ஆதரவை இழந்து விட்டார்கள் – ஓ.பி.எஸ்க்கும் தொண்டர்களின் ஆதரவு இல்லை –
ஒட்டு மொத்த
தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது.

வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கும்.

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா சுற்றுப்பயணங்களால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.