திருச்சி போலீசார் பணியிட மாற்றம்

0 605
Stalin trichy visit

திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், ரவுடிகளை கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபடவும், போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டின்கீழ் தனிப்படை இயங்கிவந்தது.

இந்த தனிப்படை போலீசார் மாநகரில் நடைபெறும் கொலை வழக்குகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து துப்பு துலக்குவது மற்றும் கொலையில் தொடர்புடைய ரவுடிகளை விரட்டி சென்று கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அவ்வப்போது போலீஸ் கமிஷனரிடம் தங்களுடைய சிறந்த பணிக்காக வெகுமதியும் வாங்குவார்கள். இந்தநிலையில் திருச்சி மாநகரில் பணியாற்றி வந்த தனிப்படை போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. நீண்டகாலமாக தனிப்படையில் பணியாற்றி வருவதால் ஒருசில ரவுடிகளிடம் தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து டி.ஜி.பி. அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மாநகர தனிப்படையில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதா (தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், ஐன்ஸ்டீன் ஆகியோர் திருவாரூர் மாவட்டத்துக்கும், ஏட்டுக்கள் ஹில்லர்ஜேக்கப், ஜானி, சரவணன் ஆகியோர் வேலூர் மாவட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சரவணன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் கஞ்சா கடத்திச் சென்ற வியாபாரியை பாய்ந்து சென்று பிடித்து காயமடைந்தார். அவருக்கு வெகுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.