வீட்டின் கதவை உடைத்து தங்க, வைர நகைகள் கொள்ளை

0 360
Stalin trichy visit

திருச்சி கே.கே.நகர், ஐயப்பன் நகர், லூர்துசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் தேவி(45). இவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் ராஜ்குமார். இவர் வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் கோவையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கோவையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக தேவி வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டில் உள்ள பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் ஆகியவை காணாமல் போயிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அருகிலுள்ள கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர் .அப்போது அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.