திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் மனைவியை கொலை செய்து பிளாஸ்டிக் பையினால் சடலத்தை சுற்றி வீட்டின் உள்ளே வைத்து வீட்டை பூட்டி விட்டு, தனது தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கணவர் ஆந்திர மாநிலத்திற்கு தப்பியோடினார்.
லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சி மீனாட்சி நகரில் உள்ள ஏஜேபி அப்துல்கலாம் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வாடகைக்கு குடியேறியவர் 37 வயதானநரசிம்மராஜ் இவருக்கு மனைவி சிவரஞ்சனி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் ஆந்திராவை பூர்வீகமாக நரசிம்மராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சமயபுரம் பகுதியில் குடியேறினார் திருச்சி திருவாணைக்காவல் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனியை திருமணம் செய்துள்ளார்.
நரசிம்மராஜ் டீக்கடை மற்றும் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் சமயபுரம் சக்திநகரில் புதிதாக வீடு கட்டிய அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த வீட்டை ரூ. 28 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.பின்னர் தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய் நகரில் வாடகைக்கு குடியிருந்துள்ளனர்.இந்த பணத்தை நரசிம்மராஜ் வீணாக செலவு செய்துள்ளார். இதற்கு அவரது மனைவி சிவரஞ்சனி எதிர்ப்பு தெரிவிக்க இதனால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை வர ஆத்திரமடைந்த கணவர் மனைவியை அடித்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.
பின்னர் தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள நரசிம்மராஜ் அக்கா வீட்டிற்கு சென்று குழந்தைகளை விட்டு விட்டு தாயும்,மகனும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் சிவரஞ்சனிக்கும் போன் செய்த போது சுவிட் ஆப் என வந்துள்ளது. இதனால் சந்தேக மடைந்த பெற்றோர் தாளக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டிய நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்து வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்த போது, பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றியநிலையில் இருந்த சடலத்தை பிரித்து பார்த்த போது சிவரஞ்சனி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்திருந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தலைமறைவாக உள்ள நரசிம்மராஜை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரமாநிலம் விரைந்து சென்றது.