மனைவி கண்டித்ததால் கணவர் மாயம் : போலீஸில் புகார்

0 276
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் உள்ள அயனாவரம் காலனியில் வேலைக்கு செல்லாத கணவனை மனைவி கண்டித்ததால் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்று மாயமானார்.

மண்ணச்சநல்லூர் அயனாவரம் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் 34 வயதான மாதவன். இவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை சில நாட்களுக்கு முன் அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடு நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.