வீடு புகுந்து செல்போன் திருடி, கார் கண்ணாடியை உடைத்த இளம் பெண்  கைது

0 492
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் மருதூர் சாலையில் வீடு புகுந்து செல்போன் திருடி விட்டு காவல் காவல் தெருவில் கார் கண்ணாடியை உடைத்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம் மருதூர் சாலை செட்டியார் காம்ப்ளக்ஸில் வசிப்பவர் 64 வயதான லட்சுமணன். இவர் காற்று வருவதற்காக வீட்டை திறந்து வைத்து குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் ஒருங்கிணன்சேரி கோயில் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகள் 22 வயதான ஆனந்தி. சமயபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் 11ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் லட்சுமணன் வீட்டுக்குச் சென்ற ஆனந்தி வீட்டில் இந்த செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து சமயபுரம் காவல்கார தெருவில் உள்ள டீச்சர் காலனி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் கார் கண்ணாடி உடைத்துள்ளார். இதில் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது அந்த பெண் கண்ணாடியை உடைத்து தெரிய வந்தது.பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் இளம்பெண்ணை பிடித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கார் கண்ணாடி உடைத்தது செல்போனை திருடியது இவர்தான் என தெரிய வந்தது.அவரிடமிருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவரை கைது செய்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்படுத்தி திருச்சி மர கடையில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.