கந்து வட்டி புகாரில் 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

0 403
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 13. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னுசிங்கம்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (28). இவர் அய்த்தாம்பட்டியை சேர்ந்த திருப்பதி (48) என்ற பெண்ணிடம் கடந்த 2018- ஆம் ஆண்டு ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு அசல் வட்டி என ரூ.84 ஆயிரம் செலுத்திய பின்னரும் ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று அருண்குமாருக்கு திருப்பதி மற்றும் செவலூரை சேர்ந்த மதனகோபால் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் திருப்பதி, மதனகோபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.