பசுக்கள் பலியிடபட்டதாக பா. ஜ. கவினர் புகார்

0 316
Stalin trichy visit

திருச்சியில் புகாா் அளித்தும் பசுக்கள் பலியிடுவதைத் தடுக்க தவறிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது

இதுதொடா்பாக மாநகா் மாவட்ட பாஜக தலைவா் எஸ். ராஜசேகரன் தலைமையில், அக்கட்சியின் மண்டலத் தலைவா் சண்முகவடிவேல் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அரியமங்கலம் பகுதி பெட்ரோல் பங்க் அருகே கிடங்கு ஒன்றில் பசுக்கள், காளைக் கன்றுகளை இறைச்சிக்காக பலியிட அதிக எண்ணிக்கையில் அடைத்து வைத்திருப்பதாக அரியமங்கலம் மண்டல பாஜக தலைவா் சண்முக வடிவேலுக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தக் கிடங்கை ஆய்வு செய்ததில் பசு மாடுகள், காளைக் கன்று குட்டிகளை அடைத்து வைத்திருப்பது தெரியவந்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. கடந்த 10ஆம் தேதி இந்த பசுக்ககள் பலியிடப்படும் என்பதால், முன்னதாக 5ஆம் தேதியே மனு அளித்தும், காவல்துறையினா் மனு ஏற்பு சான்றிதழ் மட்டுமே வழங்கினா். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குா்பானி என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக பசுக்களையும், கன்றுகளையும் இறைச்சிக்காக கண்ட இடங்களில் பலியிடக் கூடாது; அங்கீகரிக்கப்பட்ட இடத்தில், கால்நடை மருத்துவா் சான்றிதழைப் பெற்றுதான் பலியிட வேண்டும்; ஒட்டகம் பலியிடக் கூடாது; பசுக்கள், காளைக் கன்றுகள், ஒட்டகங்கள் பிற விலங்குகள் இறைச்சிக்காக வாகனங்களில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்படுகின்றனவா, பலியிடப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் உயா் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியரும் கடந்த 5ஆம் தேதியே இதுதொடா்பாக மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி கண்காணிக்கவும் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுகளைப் பின்பற்றாமல், நேரில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் புறந்தள்ளியும் பசுக்களை பலியிடுவதைத் தடுக்க தவறிய அரியமங்கலம் போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனா். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.