திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் அமலாக்கத்துறையினர் விசாரணை.

0 435
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்
இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 143 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கி இருத்தல் உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயலுதல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் நேற்று தேசிய புலனாய்வு முகமையினர் 13 மணி நேரம் ஆய்வு விசாரணை செய்த நிலையில், தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை. அமலாக்கத்துறை துணை இயக்குனர் அஜய் கவுர் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் வங்கி பண பரிவர்த்தனை குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.