தனியார் விடுதி முன்பு நிறுத்தி இருந்த பைக் மாயம்..

0 323
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் நால் ரோட்டில் உள்ள தனியார் விடுதி முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மார்ம நர்கள் திருடிச் சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி நடுபடுகையைச் சேர்ந்தவர் மதியழகன் இவரது மகன் 22 வயதான வெங்கடேஷ். இவர் நேற்று முன்தினம் மாலை சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதி முன்பு தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். பின்னர் நேற்று காலையில் எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகியிருந்தது மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.