கார்மெல்ஸ் குழுமப் பள்ளிகளில் மழலையருக்கான Montessori புத்தக வெளியீடு
கார்மெல்ஸ் குழுமப் பள்ளிகளில் மழலையருக்கான Montessori புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருமதி. ஜெபசெல்வின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். பள்ளியின் தாளாளர் திருமதி.பாக்கியஜோதி தேவதாஸ், முதல்வர் திரு.மனோவா பிரேம் குமார், செயலர் செல்வி. ஷேரன் பெர்ஸிஸ், மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஜோஸ்ஃபின் பெர்ஸி வெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Stepping Stone Montessori புத்தகத்தை பள்ளியின் செயலர் செல்வி. ஷேரன் பெர்ஸிஸ் வடிவமைத்தார். இப்புத்தகத்தை சிறப்பு விருந்தினர் திருமதி. ஜெபசெல்வின் அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டு வாழ்த்தினார்.

முன்னதாக தாளாளர் பாக்கியஜோதி தேவதாஸ் அவர்கள் இப்புத்தகத்தை பற்றி கூறிய போது, இதுவரையில் Montessori கல்வி முறையில் புத்தகங்கள் தனியாக இல்லை என்றும், இப்புத்தகம் Montessori முறையை பின்பற்றும் பயிற்றுனர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், அடிப்படைக் கல்விக்கான மிகச் சிறந்த முயற்சியாக இது அமையும் என்றும் கூறினார்.