குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி

0 370
Stalin trichy visit

திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் தொண்டு நிறுவன இயக்குனர்கள், பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வாளர்களுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி திருச்சி சத்திர பேருந்து நிலையம் சுவை ஹோட்டலில் 29.07.2022 நடைபெற்றது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர் தலைமை தாங்கி திறன் வளர்ப்பு பயிற்சியின் நோக்க உரை ஆற்றினார்.குழந்தை நலக்குழு தலைவர் மோகன் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்து பயிற்சி அளித்தார். குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்தலில் தொண்டு நிறுவனத்தின் பங்கு, குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள்,திட்டங்கள் குறித்தும், மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறையின் பங்கு, காவல் உதவி செயலி குறித்தும், நிறுவனம் சாராத பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம் குழந்தைகள் மீதான வன்முறைகள் நடக்கும் போது யாரை அணுகுவது, யாரிடம் புகார் அளிப்பது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செயல்படும் அரசு அமைப்புகள் குறித்தும், சமூக பணியாளர் பிரியதர்ஷினி மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி வட்டாரம், கிராம ஊராட்சி அளவில் செயல்படும் குழந்தை பாதுகாப்பு குழு செயல்பாடுகள்,குழந்தை பாதுகாப்பு குழுவில் தொண்டு நிறுவனத்தின் பங்கு குறித்து பயிற்சி அளித்தார்கள். சமூகப் பணியாளர் பிரியங்கா திறன் வளர்ப்பு பயிற்சியினை ஒருங்கிணைத்தும், தொகுத்தும் வழங்கினார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு புறத்தொடர்பு பணியாளர் கிருத்திகா வரவேற்றார். புறத்தொடர்பு பணியாளர் கீதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட, மாநகரத்தைச் சார்ந்த 80க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன பிரதிநிதிகள், இயக்குனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.