கடைகளில் திருடிய 3 பேர் கைது

0 296
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38). இவர் மத்திய பஸ் நிலைய அருகே பேக்கரி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் ரூ.30 ஆயிரத்தை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இனிப்பு கடை அருகே உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றக் கூடிய திருச்சி பொன்நகர் பகுதியை நேர்ந்த சாதிக் ரகுமான் (28)், நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த முகமது சித்திக் (35) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதே போல் திருச்சி தென்னூர் லட்சுமி விலாஸ் பகுதியை சேர்ந்தவர் குமார் (51). இவர் வீட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த ரூ.11 ஆயிரத்தை திருடியதாக எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.