
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே
வாழ்மால்பாளையம் கிராமத்தில் வீட்டில் கள்ள நோட்டு தயாரித்து வருவதாக மண்ணச்சநல்லூர் காவல்துறைக்குக்கு தகவல் கிடைத்ததை அடுத்து திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் உடையூர் நேற்று வால்மால் பாளையம் மேலூர் பகுதியில் தர்மராஜ் என்பவர் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர், காவல்துறையினர் சோதனை செய்தில் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதை எடுத்து தர்மராஜ், ஸ்ரீரங்கம் அருண்குமார் (40),திருச்சி சிந்தாமணியை சேர்ந்த குணா (24)ஆகிய மூவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வந்தனர்.

click the image to chat on whatsapp
இந்த விசாரணையில் மூவரும் கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட முயற்சித்தது தெரியவந்தது,மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த திருச்சி பழைய மதுரை சாலை வீரப்ப நாயக்கர் தெருவை சேர்ந்த அருண்குமார் (24 ) புதுக்கோட்டை மாவட்டம் நக்கீரர் வயல் பகுதியை சேர்ந்த மதன் குமார் (21) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய கணினி ஸ்கேனர் போன்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்