திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய வகுப்பறை கட்டடம்: காணொலிக்காட்சி திறந்து வைத்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பில் கம்மியர் மின்தூக்கு மற்றும் நகரும் படிக்கட்டு தொழிற்பிரிவிற்கு ரூ. 99 இலட்சம் மதிப்பீட்டில் பணிமனை மற்றும் வகுப்பறைக்கான புதிய கட்டடத்தினை நேற்ற திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தி நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கிகேற்றி இனிப்புகள் வழங்கினார்.