ஆலத்துடையான்பட்டி பெரிய ஏரி நிரம்பியது

0 409
Stalin trichy visit

 

திருச்சி, ஆக.2 உப்பிலியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் புளியஞ்சோலை அய்யாற்றில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஜம்பேரியின் கரையை பலப்படுத்தும் மராமத்து பணிகள் நடைபெறுவதால், அய்யாற்று வரத்து நீர் தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால் கரை புரண்டோடும் அய்யாற்றின் காட்டாற்று வெள்ளம் திருப்பப்பட்டு, ஆலத்துடையான்பட்டி பெரிய ஏரிக்கு பாய்ந்து வருகிறது. 218.86 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய ஏரி நிரம்பி வழிந்து, சின்ன ஏரிக்கு வருகிறது. இதனால் 2-ம் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் வரத்து அதிகமிருப்பினும், தொடர் மழை காரணமாக இளம்பயிர்களின் வளர்ச்சியில் பாதிப்பிருக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.