சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் 3 அடி நல்ல பாம்பு – தீயணைப்பு துறையினர் மீட்பு

0 464
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகம் தேரோடும் வீதியில் ஆடு, கோழிகளை காணிக்கைகளாக செலுத்தும் இடத்தில் 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனை சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்து மீட்டனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக ஆடு,கோழிகளை காணிக்கைகளாக செலுத்தும் இடத்தில் 3 அடி நீளம் உள்ள நல்லபாம்பு புகுந்ததாக சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சமயபுரம் கோயில் வளாகத்தில் காணிக்கை செலுத்தும் இடத்தில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்க தீவிர முயற்சி கொண்டனர்.ஆனால் பாம்பு அங்கும் இங்கும் போக்கு காட்டியது . சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பின் நல்ல பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் பாம்பை சாக்கு பையில் அடைத்த காட்டுப்பகுதியில் பாம்பை பத்திரமாக விட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.