மணப்பாறை மாட்டுச்சந்தையில் கோழிச்சந்தையும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மக்களிடம் நல்ல வரவேற்பு

0 500
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை இந்த சந்தை நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒரு நாள் சந்தையில் மட்டும் 5 முதல் 8 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும்.

இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை காலை ஆட்டுச்சந்தையும் நடைபெறும். இந்நிலையில் சமீபத்தில் மாட்டுச்சந்தையின் ஒரு பகுதியில் குதிரை சந்தை தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு வகையான குதிரைகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. இதற்கிடையில் கோழிச் சந்தையும் தொடங்கப்பட்டுள்ளது. கிளி மூக்கு, பட்டா, கீரி என பல்வேறு வகையான சேவல்கள், கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது.

மணப்பாறை மாட்டுச்சந்தையின் ஒரு பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கோழிச் சந்தை என்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விதவிதமான கோழி, சேவல்கள் விற்பனைக்கு வந்திருந்தது. இதில் கிளிமூக்கு சேவல் ஒன்று சுமார் 60 ஆயிரம் வரை விலை போனதாக கூறப்படுகின்றது. ஒரே சந்தையில் மாடு, ஆடு, குதிரை தற்போது கோழி என விற்பனை நடைபெறுவதால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.