திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், காவிரி நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார், முன்னிலையில் இன்று (5.8.22) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார்,காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு.நித்தியானந்தம் மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை, மாநகராட்சி, தீயணைப்புத் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.