பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

0 470
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி ஸ்ரீரங்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-2022ம் கல்வியாண்டில் டிப்ளமோ நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கையில் காலியிடங்கள் உள்ளது.

எனவே இதுவரை பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மற்றும் தற்போது சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியர் கல்லூரியில் சேர்க்கைக்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.150 செலுத்தி, 23.08.2021ம் தேதிக்குள் விண்ணப்பித்து மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் சேர்க்கை கல்வி கட்டணங்கள், கல்லூரி வங்கி கணக்கு எண் மற்றும் இதர தகவல்களைப் பெற கல்லூரியின் இணையதள முகவரி www.gptcsrirangam.com மற்றும் தொலைபேசி எண்கள்: 98420 04853, 88707 76192, 89030 02668, 85268 41306, 87786 32932 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.