சரக்கு வாகனம் மீது கார் மோதி மாநகராட்சி ஊழியர் பலி

0 281
Stalin trichy visit

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவர் திருச்சி மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முருகானந்தம் நேற்று மணப்பாறை வீரப்பூர் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சரக்கு வாகனத்தில் குடும்பத்துடன் சென்றார். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வீடு திரும்பிகொண்டிருந்தார். சரக்கு வாகனம் தீரன் நகர் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோதியது.

இந்த விபத்தில் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் 1½ வயது குழந்தை, சந்திரகுமார் (36), முத்துகுமார் (35), மணி (30) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகானந்தத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.