திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்

0 471
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், அலுவலக மேலாளர்கள் சிவசுப்ரமணியம்பிள்ளை, (பொது), தமிழ்கனி (குற்றவியல்) பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஸ்ரீதர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.


இதில் கலந்து கொண்டவர்கள் நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.