மாவட்ட அளவில் CBSE பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி
மாவட்ட அளவில் CBSE பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி
திருச்சி இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் ,
12 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டியில் அமிர்த வித்யாலயம் அணியும், RSK அணியும் விளையாடியது. இதில் 17/40 என்ற பாய்ண்ட் வித்தியாசத்தில் அமிர்த வித்யாலயம் அணி வெற்றி பெற்று , சுழற்கோப்பையை வென்றது.
2ஆம் பரிசு – RSK பள்ளியும்
3 ஆம் பரிசு – கேந்திர வித்யாலயம் பள்ளியும்
4 ஆம் பரிசு – காவிரி குளோபல் மேல்நிலைப்பள்ளியும் வெற்றி பெற்றன.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்சிறப்பு விருந்தினராக Dr.சுதர்ஸனா (குழந்தைகள் மருத்துவர்), பள்ளிமுதல்வர் திருமதி. உஷா ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு , வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
சான்றிதழ்களையும் ,பதக்கங்களையும் வழங்கிப் பாராட்டினர்.
பள்ளி முதல்வர் திருமதி.உஷா ராகவன் அவர்கள் வரவேற்புரையும், வாழ்த்துரையும் வழங்கினார்.உடற்கல்வி ஆசிரியர் திரு. முருகபூபதி அவர்கள் நன்றியுரை கூறினார்.தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.