காவலன் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு
திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியில் செயலர் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமையில் கண்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையம் சிறப்பு துணை காவல் ஆய்வாளர்கள் சுஜாதா மற்றும் வைஜெயந்திமாலா ஆகியோர் “காவலன் உதவி” செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இக் கூட்டத்தில் பேசிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருமதி.சுஜாதா அவர்கள் தொழில்நுட்பங்கள் பெருகிவரும் தற்காலத்தில் பெண்கள், இளம்பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் மிகவும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.பெற்றோர்களைத் தவிர பழகுவோர் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தங்களுடைய ஒளிப்படங்களை எவரிடமும் பகிர வேண்டும். நண்பர்களாக பழகுவோரிடம் எல்லைமீறக்கூடாது, நட்பு எனும் பெயரில் வரம்பு மீறாமல், வற்புறுத்தாமல், உடல்ரீதியாத உளரீதியாக வன்முறை செய்யாமல் கவனமாக பழக வேண்டும் என்றார்.
காவலன் உதவி செயலியை எல்லோரும் பதிவிறக்கம் செய்யச் சொல்லி வழிகாட்டினர். பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியை எவ்வாறு செயல்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிறைவாக அனைத்து மாணவர்களும் காவலன் உதவி செயலியை பதிவிறக்கம் செய்தனர். நிகழ்வில் ஆசிரியர்கள், இருபால் மாணவர்கள் பங்கேற்றனர்.
