நீரில் மூழ்கி இறந்த ஆதரவற்றவரை நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்
திருச்சி சிறுகமணி கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் உய்ய கொண்டான் வாய்க்கால் நீரில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாக பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இறந்த நபர் சிவப்பு கலர் சட்டையில் வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை அணிந்து உள்ளார் இறந்து போன நபரை பற்றி பெட்டவாய்த்தலை காவல்துறையினர் அக்கம் பக்கம் விசாரித்ததில் எந்த விவரமும் தெரியவில்லை. இறப்பின் காரணத்திற்காக திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடல்கூராய்வு செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்வதற்காக பெட்டவாய்த்தலை காவல் நிலைய காவலர் கார்த்திக் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை