மணப்பாறை அருகே நகை அடகு கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

0 436
Stalin trichy visit

மணப்பாறை அருகே ஊர் காவல் படை காவலரின் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை.
சிசிடிவி கேமராவையும் உடைத்து சென்ற கொள்ளையர்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அ. புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஊர் காவல் படை வீரராக உள்ளார். மேலும் இவர் கைக்காட்டியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில் இன்று கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. மேலும் நகை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தால் நகை தப்பியது. கடையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை கொள்ளையர்கள் உடைத்து விட்டு தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.