குடமுருட்டி ஆற்றின் கரையோரத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகள் : மாவட்ட ஆட்சியர், மேயர் ஆய்வு
திருச்சி மாநகராட்சி, வயலூர் குடமுருட்டி ஆற்றின் கரையோரப்பகுதிளில்
வெள்ளநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளான ஆதிநகர்,பாத்திமா நகர், ஏயூடி நகர் கரைப் பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் ரூபாய் 1கோடியே 46 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
