“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்திற்கு பலர் அச்சுறுத்துகிறார்கள்” – திருச்சியில் தொல்.திருமா!

0 412
Stalin trichy visit

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திருச்சி வருகை புரிந்தார். பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்….”திமுக தலைமையிலான அரசு சமூக நீதிக்கான அரசு – பெரியார் கண்ட கனவை அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற திட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

இந்திய வரலாற்றில் இது மாபெரும் சமூக புரட்சி – இந்தியாவிற்கே இது வழிகாட்டும் நிகழ்வு. இதை பலர் எதிர்க்கின்றார்கள் – இந்துக்களை தான் நியமிக்கின்றனர், ஆனால் இதற்கு பலர் கூக்குறல் இடுகிறார்கள். நீதிமன்றம் செல்வோம் என அச்சுறுத்துகிறார்கள் – ஆனால் தி.மு.க தலைவர் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டார்” என கூறி உள்ளார்.

 

நேற்று 21 கட்சிகளை சேர்ந்தவர்கள் சோனியா காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டோம் – விடுதலை சிறுத்தைகள் சார்பில் பெக்காசாஸ் பிரச்சினை குறித்து முன் வைத்தோம்( Zoom இணைப்பு கலந்துரையாடல் நிகழ்வில் நேற்று மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்).

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

 

Leave A Reply

Your email address will not be published.