மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

0 401
Stalin trichy visit

கரூர் மாவட்டம் தோகைமலை புதுகல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரவிசங்கர்(38). எலக்ட்ரீசியனான இவர் திருச்சி காந்திமார்க்கெட் மகாலெட்சுமி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். நேற்று பகல் அவர் வேலை பார்த்து கொண்டு இருந்தபோது, இரும்புகேட்டில் தொங்கி கொண்டு இருந்த வயர்கள் மூலமாக இரும்புகேட்டில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது எதிர்பாரதவிதமாக ரவிசங்கர் இரும்புகேட்டில் கை வைத்துள்ளார்.

உடனே அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். இதை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் ரவிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.