காந்திசந்தையில் ஆயுத பூஜை பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்

0 252
Stalin trichy visit

திருச்சி காந்திசந்தையில் திங்கள்கிழமை ஆயுத பூஜை பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சியில் வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோா்ஸ், வாகனப் பணிமனை கூடங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆயுத பூஜையில் இடம் பெறும் பொரி, கடலை, வெல்லம், பழங்கள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை திங்கள்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.