தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்தான அ எழுத்தை எழுத கற்றுக் கொள்ளும் சிறுவர்கள்..
விஜயதசமியை முன்னிட்டு திருச்சி உத்தமர் கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னதியில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து வாழை இலையில் நெல்மனிகளை கொட்டி தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்தான அ எழுத்தை எழுத கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
அ என்னும் தமிழ் எழுத்தை விஜயதசமி அன்று எழுதக்கூடிய இதனை வித்யாரம்பம் எழுதுதல் என்பார்கள் – அந்த வகையில் மும்மூர்த்திகள் ஸ்தலமான திருச்சி உத்தமர் கோயிலில் திருச்சி மட்டுமல்லாமல் திருச்சியை சுற்றி உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து வித்யாரம்பம் பயிற்று வித்து வருகின்றனர்.
